SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்கோவிலூர் அருகே சோகம் ஊஞ்சல் விளையாடியபோது துணி இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி

4/17/2021 5:24:12 AM

திருக்கோவிலூர், ஏப். 17: ஊஞ்சல் விளையாடியபோது துணி கழுத்தில் இறுக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தனராஜன் மகன் லோகேஷ்ராஜன்(13). இவன் திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்றுமுன்தினம் லோகேஷ்ராஜன் தனது வீட்டில் உள்ள ஊஞ்சலில் துணி கட்டி விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கழுத்தில் துணி சுற்றி கொண்டு இறுக்கி தொங்கி கொண்டிருந்தான். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த வந்த அவரது சகோதரி இதை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து லோகேஷ்ராஜனை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், லோகேஷ்ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தனராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊஞ்சல் விளையாடியபோது கழுத்தில் துணி இறுக்கி சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்