SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தடுப்பூசி போட்ட நெல்லை தொழிலாளி உயிரிழப்பு மாரடைப்பு காரணமா? விசாரணை

4/16/2021 12:47:21 AM


நெல்லை, ஏப். 16: நெல்லை டவுன் கூலக்கடை பஜார் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (45). தொழிலாளியான இவர் கடந்த 8ம் தேதி கங்கைகொண்டானில் உள்ள முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதனிடையே இவர் கடந்த 13ம் தேதி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து உறவினர்கள் தடுப்பூசி போட்ட மையத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக சுகாதாரப்பணிகள் துறையினர் துரித விசாரணை நடத்தினர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பொதுவாக கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கு தடுப்பூசி போட்ட உடன் சிறிய அளவில் உடல்வலி மட்டுமே தென்படும். அது ஓரிருநாளில் சரியாகும். தடுப்பூசி போட்டு சில நாட்கள் கழித்து இறப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவருக்கு வேறு உடல்நலக் குறைபாடு இருந்திருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடக்கிறது, என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 02-05-2021

    02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்