SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

vz கான்ட்ராக்டரை மிரட்டி 5.5 பவுன் நகை பறித்த வாலிபர்கள் கைது

4/16/2021 12:47:08 AM

நெல்லை, ஏப். 16:  மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த வன்னியராஜ் (32). கான்ட்ராக்டரான இவர் கடந்த 9ம் தேதி களக்காடு சிங்கிகுளம் அருகே வடுவூர்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு பைக்கில் வந்தார். பின்னர் மெஞ்ஞானபுரத்திற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். முன்னீர்பள்ளம் அடுத்துள்ள தமிழாக்குறிச்சி விலக்கில் வரும்போது அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர் வன்னியராஜை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 5.5 பவுன் செயினை பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசில் வன்னியராஜ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் தொடர்புடைய நாங்குநேரி பாணான்குளம் ரெட்டியார் தெருவை சேர்ந்த நம்பி மகன் ஐயப்பன் (28), அம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் வானமாமலை (23) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5.5 பவுன் நகை, பைக், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய பாணான்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியனை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 02-05-2021

    02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்