SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் மீது தாக்குதல்

4/15/2021 1:57:59 AM

மானூர், ஏப்.15: மானூர் அருகேயுள்ள மேல பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாள் (42). இவர் அப்பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். முருகன் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். மனைவி மீது சந்தேகப்பட்ட முருகன் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.  நேற்று முன்தினம் மாரியம்மாளை அவதூறாக பேசியதோடு அங்கிருந்த கம்பியால் சரமாரியாக தாக்கினார். அவரது மகன் கார்த்திக்கும் மாரியம்மாளை கம்பியால் தாக்கியதால் பலத்த காயத்துடன் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முருகன், கார்த்திக் மீது மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 02-05-2021

    02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்