SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

4/14/2021 1:24:28 AM

மதுரை திடீர்நகர் போலீசார் எஸ்.ஐ. பணராஜ் தலைமையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, பெரியார் பஸ்நிலையம் அருகே, ரயில்வே மேம்பாலத்தில் மேலவாசல், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ெஜபமணி (31) சாக்குப்பையில் 5 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்தார். அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல, ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் இடையபட்டி பஸ்நிறுத்தத்தில் ஒருகிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த வள்ளி (61) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ரூ.1150 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

தீப்பிடித்து மூதாட்டி பலி
மதுரை செல்லூர் தாகூர் நகர் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த குருநாதன் மனைவி பார்வதியம்மாள் (68), நேற்று முன்தினம் மாலை வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து, உடல் முழுவதும் பரவியது. இதில், தீக்காயமடைந்த மூதாட்டி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பேரன் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.  

3 டூவீலர்கள் மாயம்
மதுரை பழங்காநத்தம் தெற்குத்தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், மதுரை அண்ணா பஸ்நிலையம் அருகே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது உறவினரை பார்க்க சென்றபோது, மருத்துவமனை சுற்றுச்சுவரை ஒட்டி நிறுத்திய, அவரது டூவீலர் மாயமானது. இதேபோல, பைகராவைச் சேர்ந்த மதன் சிக்கந்தர் (27). தனது டூவீலரை, கோ.புதூர் 120 அடி ரோட்டில் நிறுத்திவிட்டு, எதிரே இருந்த கடைக்கு சென்றுவிட்டு, திரும்புவதற்குள், அந்த டூவீலர் மாயமானது. இதேபோல், கான்பாளையம் முதல் தெருவைச் சேர்ந்த துரைக்கண்ணன் (30).  இவர், தனது டூவீலரை, இரவு வீட்டுமுன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது டூவீலரை காணவில்லை. இந்த டூவீலர்கள் மாயம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்