கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
4/8/2021 6:31:48 AM
தொட்டியம், ஏப்.8: தொட்டியம் தேர் திருவிழாவிற்கு வந்திருந்த மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஈரோட்டைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் குமார்(18), பிளஸ் 2 படித்து வந்துள்ளார். தொட்டியத்தில் நடந்த மதுர காளியம்மன் கோயில் தேர் திருவிழாவை பார்ப்பதற்காக அண்ணன் வீட்டிற்கு வந்திருந்த குமார் கடந்த 3ம் தேதி தொட்டியம் தெற்கு ரத வீதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது உடலை கைப்பற்றிய தொட்டியம் போலீசார் வழக்குப்பதிந்து கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தேர்தல் நேரம் என்பதால் கொலை வழக்கில் விசாரணை செய்வதில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில் வாலிபர் குமாரை யார், எதற்காக குத்திக் கொலை செய்தனர். முன் விரோதம் காரணமா என குறித்து முழுமையான துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். மேலும் இறந்து போன குமாருடன் தொடர்பில் இருந்த அவரது நண்பர்கள், சந்தேகத்திற்குரிய நபர்கள் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
நெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மியாவாக்கி முறையில் 6 ஏக்கரில் 75 ஆயிரம் மரக்கன்று நடும் பணி
கலெக்டர் தொடங்கி வைத்தார் வணிகர்கள் கட்டாயம் தடுப்பூசி போட அறிவுறுத்தல்
சேதப்படுத்தப்பட்ட மாநகராட்சி பேனர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தீர்ந்தது
தொழிலாளர்கள் ஏமாற்றம் திருவெறும்பூர் பகுதியில் முககவசம் அணியாத 115 பேருக்கு அபராதம்
போலீசார் அதிரடி உர விலையை மத்திய அரசே நிர்ணயிக்க கோரி கோணிப்பையை சட்டைபோல் அணிந்து வந்து விவசாயிகள் மனு
மாற்றுத்திறனாளிகள் 30ம் தேதிக்குள் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும்