SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்கு எண்ணும் மையங்களில் சுழற்சி அடிப்படையில் கட்சி முகவர்கள் கண்காணிப்பு

4/8/2021 4:10:07 AM

சேலம், ஏப்.8:சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்கு எண்ணும் மையங்களில், சுழற்சி அடிப்படையில் கட்சி முகவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில், 4,280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து, அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் தொகுதிக்கு தலைவாசல் அடுத்த மணிவிழுந்தானில் உள்ள மாருதி பாலிடெக்னிக் கல்லூரியிலும், ஏற்காடு, சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு அம்மாப்பேட்டை கணேஷ் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஓமலூர், மேட்டூர், சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு ஆகிய 4 தொகுதிகளுக்கு கருப்பூரில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியிலும், சங்ககிரி மற்றும் இடைப்பாடி தொகுதிகளுக்கு சங்ககிரி அடுத்த வீராச்சிபாளையத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கண்காணிப்பில் ஈடுபட அரசியல் கட்சியினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளருக்கு 3 பேர் என்ற அடிப்படையில், முகவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, அரசியல் கட்சி சார்பில், சுழற்சி அடிப்படையில் முகவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள அறை, பதிவேடுகள் வைத்துள்ள அறை, வாக்குகள் எண்ணும் இடம் ஆகியவை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியே ஒளிபரப்பப்பட்டு, முகவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முகவர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்