ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ₹6.37 கோடி பறிமுதல்
4/8/2021 4:10:00 AM
சேலம், ஏப்.8:தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. சேலம் மாவட்டத்தில் தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடாவை தடுக்க, 100க்கும் மேற்பட்ட பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இக்குழுவினர் கடந்த 40 நாட்களாக உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன்படி, கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் நேற்று காலை வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ₹6,36,66,725 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன், ₹1,43,29,800 மதிப்பிலான 405.730 கிலோ வெள்ளி பொருட்களும், ₹36,67,58,048 மதிப்பிலான 418.334 கிலோ தங்கம் மற்றும் 22 தங்க மோதிரங்களும், ₹39,82,248 மதிப்பிலான சேலைகள், வேட்டிகள், சட்டை துணிகள், டீ சர்ட்கள், துண்டுகள், கொடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ₹2,84,840 மதிப்பிலான 2,124 மதுபாட்டில்கள் மற்றும் ₹2,50,000 மதிப்பிலான 400 தாமிர தட்டுகள், 400 தாமிர ஸ்பூன்கள், 1,000 தாமிர கப்புகள் என மொத்தம் ₹38.57 கோடி மதிப்பிலான பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. இவற்றில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ₹2,01,84,290 ரொக்கமும், ₹3,24,950 மதிப்பிலான 4.850 கிலோ கிராம் மதிப்பிலான வெள்ளி பொருட்களும், ₹2 லட்சம் மதிப்பிலான 22 தங்க மோதிரங்களும், ₹18,000 மதிப்பிலான 90 சேலைகளும் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.
மேலும் செய்திகள்
இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் கடைகள், ஹோட்டல்கள் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி
கோனேரிப்பட்டி கதவணை நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றம் பாறை திட்டுகளாக மாறிய காவிரியாறு
ஆத்தூர் அருகே பரபரப்பு போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு வெள்ளையடிக்க வந்தவரிடம் விசாரணை
சேலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு மூலம் மரபணு சோதனை நடத்த முடிவு கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு
அயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை அமோகம்
கொரோனா பரவல் எதிரொலி மேட்டூர் அணை பூங்கா மூடல்