SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகன் காதல் திருமண விவகாரம் விவசாயி கொலை வழக்கில் தம்பதி கைது

4/8/2021 4:09:52 AM

இடைப்பாடி, ஏப்.8: இடைப்பாடி அருகே மகன் காதல் திருமண விவகாரத்தில் விவசாயியை கொலை செய்த பெண்ணின் பெற்றோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான 9 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு(55), விவசாயி. இவருக்கு பெரியண்ணன்(32), பிரகாஷ்(24) என 2 மகன்கள் உள்ளனர். டிரைவரான பிரகாசுக்கும், உறவினரான செல்வம் மகள் சந்தியா(21) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சந்தியா நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த மாதம் 13ம் தேதி சந்தியாவும், பிரகாசும் வீட்டை விட்டு சென்று கோயிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கொங்கணாபுரம் போலீசில் தஞ்சமடைந்தனர். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சந்தியாவை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கடந்த 29ம் தேதி சந்தியாவும், பிரகாசும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினர்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் உறவினர்கள் சிலர், பிரகாசின் தந்தை தங்கவேலுவை மிரட்டி உள்ளனர். இதுகுறித்து, தங்கவேலு கொங்கணாபுரம் போலீசில் தெரிவித்தார். அவர்கள் தேர்தல் முடிந்ததும் பேசி கொள்ளலாம் என கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கவேலு வீட்டில் இருந்தபோது, செல்வம், அவரது உறவினர்கள் சிலர் அங்கு சென்றுள்ளனர். அப்போது, சந்தியாவை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். அதற்கு தங்கவேலு, இருவரும் எங்கு உள்ளனர் என தெரியாது என கூறினார். இதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வம், தங்கவேலுவை கடுமையாக தாக்கி கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதனை தடுக்க வந்த பெரியண்ணையும் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். இதில், தங்கவேலு பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, தங்க வேலு குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் கொங்கணாபுரம் போலீசார் தப்பியோடிய செல்வம் மற்றும் அவரது உறவினர்களான 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், தங்கவேலுவை கொலை செய்த செல்வம்(43), அவரது மனைவி செல்வி(41) ஆகியோரை நேற்று காலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த செல்வத்தின் உறவினர்களான 9 பேரை டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்