SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய் வீட்டில் தங்கியிருந்த கர்ப்பிணி தற்கொலை

4/8/2021 3:58:40 AM

வேளச்சேரி: வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார். சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஷோபனா(33). கடந்த 8 மாதத்துக்கு முன், இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது, ஷோபனா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஷோபனாவின் தாய் நீலவேணி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதனால் ஷோபனா நீலவேணிக்கு துணையாக கடந்த சில நாட்களாக அம்மா வீட்டிற்கு வந்து தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கர்ப்பிணியான தனது மகள் ஷோபனாவை, தனியாக வீட்டில் விட்டுவிட்டு நீலவேணி ஓட்டுப் போடுவதற்காக, பக்கத்தில் இருந்த பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றார்.

பின்னர், வாக்களித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனையடுத்து, கதவைத் திறக்குமாறு, ஷோபனாவை கூப்பிட்டுள்ளார். அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால் கதவை பலமாக தட்டியுள்ளார். அப்போதும், ஷோபனா கதவை திறக்காததால் சந்தேகமடைந்த நீலவேணி, ஜன்னல் வழியாக படுக்கை அறையை பார்த்தார். அப்போது, தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து, அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, இச்சம்பவம் குறித்து, நீலவேணி, வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஷோபனா பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து, ஷோபனா கணவர் மற்றும் உறவினர்களிடம், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தினேஷ்குமார், ஷோபனாவிற்கு திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில், வரதட்சனை கொடுமை ஏதாவது நடந்ததா என்பது குறித்து ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்