SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக வேட்பாளர் ராஜாவுக்கு ஆதரவாக பிரசாரம் சங்கரன்கோவிலில் சென்ட் ெதாழிற்சாலை கனிமொழி எம்பி வாக்குறுதி

4/3/2021 6:04:12 AM

சங்கரன்கோவில், ஏப். 3: சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து நேற்று  மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி  தீவிர பிரசாரம் செய்தார். முன்னதாக சங்கரன்கோவில் வந்த கனிமொழி எம்பிக்கு பருவக்குடி எல்லையில்  வரவேற்பு அளிக்கபட்டது.  தொடர்ந்து சங்கரன்கோவில் தேரடி திடலுக்கு வந்த கனிமொழி அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசியதாவது,   திமுக ஆட்சிக்கு வந்தால் சங்கரன்கோவிலில்  பூ விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சென்ட் தொழிற்சாலை அமைத்து இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். இளைஞர் சுயஉதவிகுழுக்கள் அமைக்கப்படும்.  ஸ்டாலின் முதல்வரானவுடன் விவசாயக்கடன், கல்விக்கடன், 5 பவுனுக்குள் உள்ள நகைக்கடன் ரத்து செய்யப்படும். முதியோர் பென்சன்  ரூ.1500 வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில்   தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், சங்கரன்கோவில் நகர செயலாளர் சங்கரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜாதலைவர், லாலாசங்கரபாண்டியன், கடற்கரை வெற்றிவிஜயன்,

சேர்மதுரை, கிறிஸ்டோபர், மாவட்ட இலக்கியஅணி சுப்பையா, மதிமுக நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, விசிக தொகுதி பொறுப்பாளர் பீர்மைதீன், தவாக கணேசன், திதக வீரப்பன், ஆதித்தமிழர் பேரவை தென்னரசு, பூலிதேவர் மக்கள் இயக்கம் பெருமாள்சாமி, ஆதிதிராவிடர் பேரவை பெருமாள், திமுக மாவட்டபொறுப்புக்குழு உறுப்பினர்கள் அன்புமணிகணேசன், வக்கீல் கண்ணன்,   வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் அண்ணாவியப்பன், முனியசாமி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புனிதாஅஜய்மகேஷ்குமார், சங்கைசரவணன், ஓய்வுபெற்ற எஸ்பி குணசேகரன், தொமுசமண்டல மாவட்ட அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன், தொமுச நிர்வாகிகள் செல்வகுமார், சங்கர்ராஜ், வக்கீல்கள் அன்புச்செல்வன், ஜெயக்குமார், வாழைக்காய் துரைபாண்டியன், மகளிரணி ராமு, அண்ணாமலை, தொண்டரணி முத்துமணிகண்டன், இளைஞரணி சரவணன், பிரகாஷ், மாணவரணி அப்பாஸ்அலி, கார்த்திக், தினகரன், செயலாளர் தங்கராஜ், மின்வாரியம் மகாராஜன், நகர விவசாய தொழிலாளரணி அஜய்மகேஷ்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்


மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்