SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் பழுதடைந்த காலனி வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் திமுக வேட்பாளர் அசோக்குமார் உறுதி

3/29/2021 4:35:28 AM

சேதுபாவாசத்திரம், மார்ச் 29: பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.அசோக்குமார் 3வது நாளாக, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கட்டையங்காடு, சிவானம்புஞ்சை, நடுவிக்குறிச்சி, நடுவிக்குறிச்சி ஆதிதிராவிடர் தெரு, கள்ளம்பட்டி, மேற்குடிக்காடு, ஆயன்தாக்கு, பூவாணம், சொக்கநாதபுரம் தில்லங்காடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, கட்டையங்காடு உள்ளிட்ட தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்துள்ள ஆதிதிராவிடர் காலனி புதிதாக கட்டித்தரப்படும். பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும். கட்்சி வேறுபாடின்றி அந்தந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

உங்களுடைய அழைப்புக்கு ஓடோடி வருவேன். மக்கள் பணியாற்றுவதே எனது குறிக்கோள். கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் உங்களை தேடி வரவில்லை. நான் உங்கள் தேவையை அறிந்து ஓடோடி வருவேன். சிவனாம்புஞ்சை குளக்கரை சாலை தார்சாலையாக அமைத்து தரப்படும். தெருச்சாலைகள் சீரமைக்கப்படும். குடிநீர் வசதி செய்து தரப்படும். நடுவிக்குறிச்சியில் பேருந்துகள் ஊருக்குள் வருவதில்லை. அங்காடி வசதி இல்லை என சொல்லப்பட்டுள்ளது. இவற்றை அனைத்தையும் செய்து தருவேன்.குளக்கரை படிக்கட்டு அமைக்கப்படும். இணைப்புச் சாலைகள் சீரமைக்கப்படும். ஏரி, குளங்கள் தூர்வாரப்படும்.

நான் உங்களுக்காக உழைப்பதற்கு தயாராக உள்ளேன் எனவே உதசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். அவருடன் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ராஜாதம்பி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்காரம், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் செல்வராசு, சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய பொருப்பாளர் மு.கி. முத்துமாணிக்கம் மற்றும் மத சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sudan-26

  சூடானில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!: பிரதமர், அமைச்சர்கள் கைது..மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்..!!

 • karnataka-schools-25

  20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

 • wheel-uae-25

  250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்