SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி அரசின் சட்டத்தை திருத்திய மத்திய அரசு புதுச்சேரிக்கும் இதே நிலை பாஜகவால் ஏற்படும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி

3/26/2021 1:08:43 AM

புதுச்சேரி, மார்ச் 26: டெல்லி அரசின் சட்டத்தை திருத்தி மத்திய அரசு மசோதா நிறைவேற்றியுள்ளதைபோல் புதுச்சேரிக்கும் இதே நிலை பாஜகவால் ஏற்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று கூறுகையில், டெல்லி அரசின் சட்டத்தை மாற்றி மத்திய அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. டெல்லியின் அமைச்சரவை எடுக்கும் முடிவை துணை நிலை ஆளுநர் அனுமதியில்லாமல் நடைமுறைப் படுத்தக்கூடாது என அந்த சட்டம் சொல்கிறது. டெல்லி யூனியன் பிரதேச சட்டம் ஷரத்து 4ல் திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதன் காரணமாக தேர்வு செய்யப்பட்ட அரசின் உரிமையை பறித்து கொண்டு விட்டார்கள். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அமைச்சரவைக்கு முடிவு எடுக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவந்து பறித்திருக்கிறார்கள். இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

 இந்த நிலையை பார்க்கும்போது எம்எல்ஏக்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு கவர்னர் துணையில்லாமல் எதுவும் செய்ய முடியாது. இதே நிலை வெகு விரைவில் பாஜகவால் புதுச்சேரிக்கு ஏற்படும். புதுச்சேரி மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். என்.ஆர் காங்கிரஸ் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துகிறார்கள். பாஜக மாநில அந்தஸ்து தேவையில்லை என சொல்வார்கள். நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியை கலைத்த சரித்திரம் பாஜகவுக்கு உண்டு. டெல்லியை போல சட்ட மாற்றத்தை இங்கும் கொண்டு வந்தால் புதுச்சேரி அதிகாரம், முழுமையாக பறிக்கப்படும். அமைச்சரவை எடுக்கும் முடிவை கவர்னர் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நியமிக்கப்பட்டவர் மூலம் பாஜக ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் கொண்டு வருவார்கள். மக்களின் வாக்குரிமை பறி போய்விடும்.

 துணை நிலை ஆளுநரால் அனைத்து அதிகாரமும் தட்டிப்பறிக்கப்படும். எனவே மாநில அந்தஸ்து பெறுவதை தவிர வேறு வழியில்லை. எனவே புதுச்சேரி மாநில மக்கள் இதனை எதிர்க்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட அரசை எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள். பாஜக காலூன்றினால் தனித்தன்மை நீக்கப்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு பாஜக கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். மாநில உரிமைக்கு தொடர்ந்து போராடுவோம். ஆதார் எண்ணோடு இணைந்துள்ள தொலைபேசி எண்களை பெற்று பிரசாரம் செய்கிறார்கள். மிக தெள்ளத், தெளிவாக எப்படி பாஜகவிக்கு எண்கள் சென்றது. யார் கொடுத்தது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு கவர்னர், உதய், சைபர் கிரைம் 26ம் தேதி பதிலளிக்க வேண்டும். செல்போன் எண்கள் பகிரப்ப்பட்டதன் மூலமாக நிர்வாகத்தின் திறன்யின்மையை காட்டுகிறது.

 10 சதவீத இடஒதுக்கீடு கொடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையென மத்திய அரசு தெரிவித்துள்ளது. கிராமபுற பிள்ளைகளும் பாஜக புறக்கணிக்கிறது. பாஜக அடிப்படை உரிமையை மட்டுமல்ல. மக்களின் அதிகாரத்தை பறிக்கிறது. என். ஆர் காங்கிரஸ் வாய் மூடி மவுனியாக இருக்கிறது. பிரசாரத்தில் மக்கள் மத்தியில் காங்கிரஸ் கூட்டணிக்கு எழுச்சி இருக்கிற்து. மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யூனியன் பிரதேசம் என்ற வார்த்தையை ராகுல் காந்தி நீக்கிவிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

 • baloon111

  பலூனை தட்டி விளையாடுபவர்களுக்கான உலகக் கோப்பை டோர்னமென்ட்: ஸ்பெயினில் வினோதம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்