SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டுப்பாளையம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி பிரசாரம்

3/24/2021 2:21:17 AM

மேட்டுப்பாளையம், மார்ச் 24:  மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். சண்முகசுந்தரத்தை ஆதரித்து திமுக நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் இமான் அண்ணாச்சி நேற்று மேட்டுப்பாளையம் மேற்கு பகுதி உள்ள கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், தமிழகத்தின் தற்போதைய கடன் 6 லட்சம் கோடி என்று சொல்கிறார்கள். உண்மையான தொகை எவ்வளவு என்று தெரியாது. ஏனென்றால் அந்த அளவுக்கு மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் உறவினர்களுக்கு டெண்டர்கள் வாரி வழங்கி அதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினை அரியணையில் அமர்ந்தவுடன், அதிமுக அரசு செய்துள்ள ஊழல்களை வெளியில் கொண்டுவந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பது முதல் பணி. மேலும் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மங்களை விசாரணை கமிஷன் அமைத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பேசினார்.வாக்கு சேகரிப்பின்போது, வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமசந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள், மருதூர் ஊராட்சி முன்னாள் தலைவர், ரங்கராஜ் மற்றும் திமுக ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் பிறந்த ஊரான திம்மம்பாளையத்தில் விநாயகர் மற்றும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து பிரசாரத்தை தொடங்கினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்