கோத்தகிரி மிலித்தேன், சுண்டட்டியில் தி.மு.க. வேட்பாளர் ராமசந்திரன் வாக்கு சேகரிப்பு
3/23/2021 2:59:51 AM
ஊட்டி, மார்ச் 23: குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி மிலித்தேன், சுண்டட்டி மற்றும் நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் இளித்தொரை ராமசந்திரன் தீவிர வாக்கு சேகரித்தார். இவருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் எம்.பி. ஆ.ராசா கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். நேற்று காலை முதல் ராமசந்திரன் குன்னூர் தொகுதிக்குட்பட்ட மிலித்தேன், இந்திரா நகர், கேர்கம்பை, காக்காசோலை, குருகுத்தி சுண்டட்டி, நெடுகுளா, பாமுடி, கொட்டநள்ளி, சேலக்கொரை, கேரடா மட்டம் வெற்றி நகர், கோநாடு காந்திநகர், ஓம் நகர், கக்குலா, ஈளடா, சன்சைன் நகர், சுள்ளிகோடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது, அவர் பேசுகையில்,`அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன்கள் ரத்து செய்யப்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் கட்டாயம் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.
இதன்மூலம், கடன்கள் தள்ளுபடி ஆவதுடன், மீண்டும் கடன் பெற்று தொழில் தொடங்க முடியும். அதேபோல், கல்வி கடன் ரத்து செய்யப்படும். எனவே, படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் இதை உணர்ந்து தி.மு.க.விற்கு வாக்களிப்பதன் மூலம் தாங்கள் பெற்றுள்ள கல்வி கடன் ரத்தாக வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, நடைபாதை வசதி, சமூதாய கூடம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தினர். தன்னை தேர்ந்தெடுத்தால், அனைத்து பகுதிகளிலும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்’ என்றார். இப்பிரசாரத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜூ, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவர் ராம்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், இந்திய கம்யூ., பெள்ளி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மூச்சுக்குன்னு பகுதியில்
சுற்றுலா பயணிகளை கவர்ந்த ராணுவ வீரர்கள் இசை நிகழ்ச்சி
ஊட்டியில் மிதமான காலநிலை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தமிழக முதல்வரிடம் மாநகராட்சி கவுன்சிலர் மனு
முதல்வருடன் செல்பி எடுத்த பெண்கள்: சாலையோர கடைகளில் காய்கறி விற்பனை அதிகரிப்பு
படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் ஊட்டி மலர் கண்காட்சி நாளை துவக்கம் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களால் வேளாண் பல்கலை., கட்டிட முகப்பு தோற்றம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்