கோத்தகிரி அருகே அடிப்படை வசதி செய்து தராததால் போராட்டம்
3/23/2021 2:59:01 AM
குன்னூர், மார்ச் 23: கோத்தகிரி கட்டபெட்டு அருகே சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால் கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டபெட்டு அருகே சக்திநகர் கிராமம் உள்ளது. இங்கு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் 500 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமான இடம் எனக் கூறி கடந்த 50 ஆண்டுகளாக சாலை வசதி செய்து கொடுக்கவில்லை. இதுதவிர, மின் வசதி, கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்து பலமுறை புகார் மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகள் செய்து தராததால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மூச்சுக்குன்னு பகுதியில்
சுற்றுலா பயணிகளை கவர்ந்த ராணுவ வீரர்கள் இசை நிகழ்ச்சி
ஊட்டியில் மிதமான காலநிலை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தமிழக முதல்வரிடம் மாநகராட்சி கவுன்சிலர் மனு
முதல்வருடன் செல்பி எடுத்த பெண்கள்: சாலையோர கடைகளில் காய்கறி விற்பனை அதிகரிப்பு
படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் ஊட்டி மலர் கண்காட்சி நாளை துவக்கம் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களால் வேளாண் பல்கலை., கட்டிட முகப்பு தோற்றம்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை