செய்யூர் தொகுதியில் விசிக வேட்பாளர் பனையூர் பாபு வேட்புமனு தாக்கல்
3/19/2021 1:44:55 AM
செய்யூர், மார்ச் 19: செய்யூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செய்யூர் (தனி) தொகுதி வேட்பாளராக பனையூர் பாபு அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏவை, சாலவாக்கத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.லத்தூர் ஒன்றிய வடக்கு, தெற்கு திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பாபு ஆகியோர் தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் செய்யூரில் நடந்தது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிட பொறுப்பாளர்கள் பார்வேந்தன், விடுதலை செழியன் ஆகியோர் வேட்பாளர் பனையூர் பாபுவை கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல், சித்தாமூரில் நடந்த அறிமுக கூட்டத்தில், சித்தாமூர் கிழக்கு, மேற்கு திமுக ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, சிற்றரசு ஆகியோர் வேட்பாளர் பனையூர் பாபுவை அறிமுகம் செய்து வைத்தனர். தொடர்ந்து, வேட்பாளர் பனையூர் பாபு, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.முன்னதாக செய்யூர் பஜாரில் இருந்து மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் மேளதாளங்களுடன், பட்டாசு வெடித்து பேரணியாக செய்யூர் தாலுகா அலுவலகம் வந்தனர். அதன்பின், மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில், பனையூர் பாபு தேர்தல் அலுவலர் சீதாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.விடுதலை சிறுத்தைகள் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு, மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் செய்யூர் தொகுதி பொறுப்பாளர் பொன்னிவளவன், மாவட்ட துணை செயலாளர் ஈழவேந்தன், ஒன்றிய செயலாளர்கள் கார்வேந்தன், புரட்சிமாறன், புகழேந்தி, தமிழ் விரும்பி, புரட்சி மணவாளன், இடைக்கழிநாடு பேரூராட்சி செயலாளர் அகிலன், கட்சி நிர்வாகிகள் தமிழினி, விடுதலை அரசு, எழில் ராவணன், திருமாறன், தியாகராஜன், சாரங்கன், அப்பு (எ) சிற்றரசு, முத்துக்குமார், விடுதலை வளவன், செந்தமிழ் வளவன், திமுக நிர்வாகிகள் தணிகாசலம், அருண்மொழிவர்மன், ஆசிரியர் பாபு, பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்
கடுக்கலூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
காஸ் குடோன் தீவிபத்து சிகிச்சை பலனின்றி உரிமையாளர் பலி
முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்து சித்ரவதை: தாய், 2வது கணவன் கைது
குன்றத்தூர் பகுதிகளில் குட்கா கடத்திய 3 பேர் கைது
காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: தலைமறைவானவர்களை தேடி வரும் போலீஸ்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!