எழும்பூர் அரசு மருத்துவமனையில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம்
3/18/2021 4:49:38 AM
சென்னை: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், குளுக்கோமா எனப்படும், கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு வாரம் நடந்து வருகிறது. மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு, கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை டாக்டர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், சிலருக்கு பரிசோதிக்கப்பட்டு, மருந்துகளும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து அரசு கண் மருத்துவமனையின் இயக்குனர் கூறுகையில், “இந்தியாவில், 1.20 கோடிக்கு அதிகமானவர்கள் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் தங்களுக்கு கண் அழுத்த நோய் இருப்பதை அறியாதவர்களாக உள்ளனர்.
மேலும் கண் அழுத்த நோய் ஏற்படும்போது, கண்ணிற்குள் உள்ள அழுத்தம் அதிகரித்து, கண்ணில் உள்ள, நரம்புகளும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பக்கவாட்டு பார்வை திறன் இழப்பு, மங்கலான பார்வை, கண் வலி மற்றும் தலைவலி, வெளிச்சத்தை சுற்றி வண்ணமயமான ஒளி வளையங்கள், படிப்பதற்கு பயன்படுத்தும் கண்ணாடியை அடிக்கடி மாற்றுதல் போன்ற நிலை உருவாகும்” இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய பைனான்சியர் கைது
பைனான்சியர் கொலை வழக்கு நீதிமன்றத்தில் ரவுடி சரண் : மேலும் 3 பேர் கைது
ரயில் மோதி இளம்பெண் பலி
யார் பெரிய ரவுடி என்ற தகராறில் 3 பேரை கொலை செய்ய திட்டமிட்ட 7 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது: 12 கத்தி, ஆசிட், 5 பைக், கஞ்சா பறிமுதல்
70 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
மழைநீர் கால்வாய்களில் விதிமீறி கழிவுநீரை வெளியேற்றிய 2,983 இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!