திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி லால்குடி ஒன்றிய பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
3/18/2021 2:33:03 AM
லால்குடி மார்ச் 18: லால்குடி ஒன்றிய பகுதியில் திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.லால்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் நான்காவது முறையாக போட்டியிடுகிறார். அதனைத் தொடர்ந்து புள்ளம்பாடி அடுத்த முதுவத்தூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர், நேற்று முன்தினம் லால்குடி ஒன்றியம் தாளக்குடி, அகிலாண்டபுரம், கீரமங்கலம், தெற்கு சத்திரம், மேலவாளாடி, புதுக்குடி, செம்பழனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.அப்போது வேட்பாளர் சவுந்தரபாண்டியன், மூன்று ஆண்டுகள் எம்எல்ஏவாக பதவி வகித்த காலத்தில் மக்களுக்கு செய்து கொடுத்த பல்வேறு திட்டப்பணிகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார். மேலும், திமுக ஆட்சி அமைந்தவுடன் எண்ணற்ற நலத்திட்டங்கள் நிறைவேற்ற பாடுபடுவேன் என்று கூறினார். ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட துணை செயலாளர் துரை கந்தசாமி, லால்குடி நகர செயலாளர் துரைமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர்கள் ஆதிநாயகி ரவி, தீபா சுதாகர், பால வினோதினி செந்தில், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் மைக்கேல், சந்திரமோகன், வழக்கறிஞர் பிரிவு சசிகுமார், கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு சந்திரன், ரஜினி, காங்கிரஸ் வட்டார தலைவர் சுகுமார், ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, துணை தலைவர் பிரபாகர், ஒன்றிய கவுன்சிலர் சின்னதுரை, மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அதிகாரிகள் திடீர் ஆய்வில் அதிரடி சிறைவாச ரவுடிகள் இருவருக்கு குண்டாஸ்
ஜி.ஹெச் வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு
நர்சிங் மாணவி தற்கொலை
மயங்கி விழுந்து காவலாளி சாவு
திருச்சி மாவட்டத்தில் 8.3 டன் விதைகள் விற்க தடை விதிப்பு
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்