SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மமக தலைவர் குற்றச்சாட்டு பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அசோக்குமார் வேட்புமனு தாக்கல்

3/18/2021 2:26:39 AM

பேராவூரணி, மார்ச் 18: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளர் அசோக்குமார் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனியார் மன்டபத்தில் இருந்து திமுக தொண்டர்கள், கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக சென்று, தாசில்தார் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். 100 மீட்டருக்கு முன்பாக தொண்டர்களை நிறுத்திவிட்டு, தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலு, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் ஆகியோருடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் ஐவண்ணிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி பரிமளா மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் ஆவணம் சாலையில் தேர்தல் அலுவலகத்தை திறந்து, பெரியார், அண்ணா, அம்பேத்கர், கருணாநிதி, இந்திராகாந்தி படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி வேட்பாளர் அசோக்குமார் பேசியது, பேராவூரணி சட்டமன்ற தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன, ஆனால் எதுவும் நடைபெறவில்லை எல்லா அறிவிப்புகளும் வெற்று அறிவிப்புகளாக உள்ளன. இந்த தொகுதியை நான் வெற்றி பெற்றால் தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன். அதற்கு திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று பேசினார். கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் திமுக மாநில கலை இலக்கிய பகுத்தறிவு அணி செயலாளர் பழஞ்சூர் செல்வம், திமுக ஒன்றிய செயலாளர்கள், பேராவூரணி தெற்கு அன்பழகன், வடக்கு இளங்கோவன், சேதுபாவாசத்திரம் வடக்கு முத்துமாணிக்கம், தெற்கு ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப.சேகர், தலைமைக்கழக பேச்சாளர் அப்துல்மஜீத், நகரச் செயலாளர் நீலகண்டன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sudan-26

  சூடானில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!: பிரதமர், அமைச்சர்கள் கைது..மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்..!!

 • karnataka-schools-25

  20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

 • wheel-uae-25

  250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்