தேவாரம் பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம்
3/14/2021 2:15:39 AM
தேவாரம், மார்ச் 14: தேவாரம் பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் நடந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 13.3.2021 மற்றும் 14.3.2021 ஆகிய இரு தினங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் மூலமாக, புதிய வாக்காளர்களுக்கு, இணையதளம் வாயிலாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தரவிறக்கம் செய்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதனை வாக்காளர்கள் பயன்பெறும் வகையில், நடத்த வேண்டுமென்று, தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணண்ணி உத்தரவிட்டார். இதன்படி தேவாரம் பேருராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கம்பம் சட்டமன்றத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் கலந்துகொண்டு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அட்டைகளை தரவிறக்கம் செய்து வழங்கினார். இந்நிகழ்வின்போது உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி, தேவாரம் வருவாய் ஆய்வாளர் காரல்மார்க்ஸ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
கேரளாவில் கூடுதல் அபராதம் கம்பத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
சோத்துப்பாறை அணை பாசன நீர் திறக்கும் முன் வாய்க்கால்களில் உடைப்பை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
வண்டிப்பெரியாறில் பஸ், லாரி மோதிய விபத்தில் 25 பேர் காயம்
இரு சிறுமிகள் பலியான விவகாரம்: பண்ணைப்புரம் செயல் அலுவலர், பொறியாளர் சஸ்பெண்ட்
வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
கண்டமனூரில் குடிநீர் தட்டுப்பாடு
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!