SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதி சிவாலயங்களில் சிவராத்திரி விழா திரளான பக்தர்கள் தரிசனம்

3/12/2021 1:52:57 AM

முசிறி,மார்ச்.12:முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதி சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.முசிறி சந்திரமவுலீஸ்வரர் சமேத கற்பூரவள்ளி அம்மன், வெள்ளூர் கிராமத்தில் திருக்காமேஸ்வரர் சமேத சிவகாமசுந்தரி அம்மன், திண்ணகோணம் பசுபதீஸ்வரர், திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர், தா.பேட்டை காசி விஸ்வநாதர் சமேத காசிவிசாலாட்சி அம்மன், காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர தலமாக விளங்கும் கைலாசநாதர் சமேத கருணாகரவள்ளி அம்மன், மங்களம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர், தொட்டியம் அனலாடீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு காலபூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இரவு முழுவதும் கண் விழித்திருந்து வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்