வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி
3/8/2021 5:58:12 AM
கறம்பக்குடி, மார்ச் 8: கறம்பக்குடியில் நேற்று வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கறம்பக்குடியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையினர் சார்பில் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தாசில்தார் விஸ்வநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கி சீனிக்கடை முக்கம், உள்கடை வீதி, பேருந்து நிலையம், புதுக்கோட்டை சாலை வழியாக மீண்டும் தாலுகா அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் கறம்பக்குடி தாலுகா துணை தாசில்தார் ராமசாமி, வருவாய் ஆய்வாளர்கள் ஸ்டெல்லா, புவனேஸ்வரி மற்றும் வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர்கள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை ‘டாம்ப்கால்” நிலையத்தில் தினமும் 450 கிலோ வீதம் கபசுர நிலவேம்பு குடிநீர் தயாரிப்பு
ஆய்வு செய்த கலெக்டர் தகவல் களமாவூர் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்
திருநாவுக்கரசர் எம்பி கோரிக்கை இலுப்பூரில் லாரி மோதி மின்கம்பம் உடைந்தது
மின்தடையால் மக்கள் அவதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறை தேர்வு துவக்கம் 13,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு புதுக்கோட்டையில் 47 பேருக்கு கொரோனா
கறம்பக்குடி அருகே உர விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!