பொன்னமராவதி அருகே டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
3/8/2021 5:57:56 AM
பொன்னமராவதி, மார்ச் 8: பொன்னமராவதி அருகே மனைவியை விட்டு பிரிந்த டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி பாரதிநகர் நரசனங்கண்மாயில் ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாராணை மேற்கொண்டனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர கீழ வேகுப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ஆனந்த் (எ) சங்கிலிமுருகன் (39) என்பதும், இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒன்றறை ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை ‘டாம்ப்கால்” நிலையத்தில் தினமும் 450 கிலோ வீதம் கபசுர நிலவேம்பு குடிநீர் தயாரிப்பு
ஆய்வு செய்த கலெக்டர் தகவல் களமாவூர் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்
திருநாவுக்கரசர் எம்பி கோரிக்கை இலுப்பூரில் லாரி மோதி மின்கம்பம் உடைந்தது
மின்தடையால் மக்கள் அவதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறை தேர்வு துவக்கம் 13,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு புதுக்கோட்டையில் 47 பேருக்கு கொரோனா
கறம்பக்குடி அருகே உர விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!