SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணமேல்குடி அருகே மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்

3/8/2021 5:57:32 AM

அறந்தாங்கி, மார்ச் 8: மணமேல்குடி அருகே மணல் கடத்திய மினிலாரியை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் இடையாத்திமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோப்பில் இருந்து அனுமதி பெறாமல் கரகத்திக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் மினி லாரியில் அரை யூனிட் மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தார். அதனைக்கண்ட இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் அனுமதி பெறாமல் மணல் ஏற்றிவந்த மினிலாரியை பறிமுதல் செய்ததுடன், மினிலாரியின் உரிமையாளர் ராஜசேகரை கைது செய்தார். மேலும் அவருக்கு உதவி பாபு, ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். அத்தாணி பகுதியில் மணமேல்குடி இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வெள்ளாற்றில் இருந்து அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த காரக்கொல்லையைச் சேர்ந்த சந்திரபோஸ் என்பவருக்கு சொந்தமான மாட்டுவண்டியையும், கால் யூனிட் மணலையும் பறிமுதல் செய்தார்.

திருடர்களை பிடித்தால் ஆயிரம் ரூபாய் பரிசு
திருவப்பூர் பக்தர்கள் கூட்டத்தில் சந்தேகப்படுபடி திருடர்கள் நடமாடினால் அவர்களை பிடித்துக் கொடுக்கும் பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்