SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை வெயிலில் இருந்து பறவைகளை காப்பாற்ற வீட்டு மாடியில் பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்

3/7/2021 5:39:08 AM

புதுக்கோட்டை, மார்ச் 6: நீரின்றி அமையாது இவ்வுலகம் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப நீரை ஆதாரமாக கொண்டே உலகிலுள்ள அனைத்துயிர்களும் உயிர்வாழ்கின்றன. தாயைப்பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்ற பழமொழியும் நம் வழக்கத்தில் உள்ளது. தண்ணீரை ஆதாரமாகக்கொண்டே நாம் உயிர் வாழ்வதால்தான், வெளியில் சென்று களைத்து வீடுதிரும்பியதும் அவர்கள் குடிக்கத் தண்ணீர் கொடுப்பதை நாம பண்பாடாக கொண்டுள்ளோம். உயிர்வாழ்வதற்கு மனிதனுக்கு மட்டும் நீர் அவசியம் அல்ல. அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் அவசியம். 2 நாட்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லையெனில் கூட மான்கள் இறந்துவிடும். இதற்கு பறவையினங்களும் விதிவிலக்கல்ல. வீடுகட்டி குடும்பம் நடத்தி வந்த மனிதன் மக்கள்தொகைப் பெருக்கத்தாலும், நகர வளர்ச்சியாலும் அடுக்குமாடிகள் என்ற பெரியரில் கூடுகட்டி குடும்பம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் காடுகளாகவும், வயல்வெளிகளாகவும் இருந்த நிலப்பரப்புகள் இன்று தொழிற்சாலைகளாகவும், குடியிருப்புகளாகவும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாகவும் வேகமாக மாறி வருகின்றன. சமுதாய மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தால் மனிதர்களை விட பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது பறவையினம். ஆற்றோரங்களிலும், அழகிய காடுகளிலும், வயல்வெளிகளிலும் தனக்கான உணவையும் தண்ணீரையும் பெற்று வந்த பறவையினங்கள், இப்போது கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பல இடங்களில் செத்துக்கிடக்கின்றன.

இதைத் தடுப்பதற்காகவும் பறவையினங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் பறவைகள் மீது அக்கறைகொண்ட ஆர்வலர்கள் செல்போன்களில் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் பறவைகள் வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் செய்தியனுப்பி வருகின்றனர். அதில், ``கோடை வெயில் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகள் வறண்டு போய்க் கிடக்கின்றன. கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகரப் பகுதிகளில் வெப்பத்தால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதை போல், கோடையின் தாக்கத்திலிருந்து பறவையினங்களைக் காப்பாற்ற ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களது வீடுகளின் மேல்பகுதி, மாடி, பால்கனி, முற்றத்தின் மேல்பகுதிகளில் பறவைகளுக்காக ஒரு சிறிய பாத்திரத்தில் அல்லது கப்பில் தயவுசெய்து தண்ணீர் வையுங்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த குறுஞ்செய்தியை நீங்கள் உங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கட்டாயம் அனுப்பிவையுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்படித்தாதவது ஒரு சிலர் முன்வந்து பறவைகள் மீது அக்கறை காட்டுவார்கள் என்று பறவைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

 • 15-04-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-04-2021

  15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • singapore-door-robot

  சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்