SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்னையை தாக்கும் வண்டுகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

3/7/2021 5:38:07 AM

பொன்னமராவதி, மார்ச் 6: பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் தென்னை மரத்தில் தாக்கும் நோய்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர். அப்போது காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரி மாணவிகள் பொன்னமராவதி அருகே நகரப்பட்டியில் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அங்கு விவசாயிகளுடன் வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறையில் பின்பற்றப்படும் விவசாய பணிகள் குறித்து கலந்துரையாடினர். நேற்று கல்லம்பட்டியில் அதிக அளவில் தென்னை மரங்கள் சாகுபடி செய்த விவசாயிகளிடம் சென்று அவர்கள் கடைபிடிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் தென்னை மரத்தில் தாக்கும் காண்டமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் கவர்ச்சி பொறியினை பற்றி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் மாணவிகள் தீபிகா, தேவதர்ஷினி, சந்தியா, காயத்திரிதேவி, பரமெஸ்வரி, தோகை ஆகியோர் இந்த களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்