SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகாரிகள் எச்சரிக்கை திருமயம் அருகே லாரி- சுற்றுலா வேன் மோதல்: 13 பேர் காயம்

3/7/2021 5:37:44 AM

திருமயம், மார்ச் 6: திருமயம் அருகே கல் ஏற்றி வந்த மினி லாரியும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் 12 பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்று விட்டு காரைக்குடி-திருச்சி பைபாஸ் சாலையில் சுற்றுலா வேனில் 10க்கும் மேற்பட்டோர் நேற்று புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். புதுக்கோட்டையில் இருந்து கல் ஏற்றிக்கொண்டு காரைக்குடி நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. திருமயம் அருகே உள்ள ஓலைக்குடிப்பட்டி பகுதியில் சென்றபோது மினி லாரியும், டூரிஸ்ட் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி லாரி சாலையில் கவிழ்ந்தது. மினி லாரி மோதியதில் சுற்றுலா வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. வேனில் வந்த 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மினி லாரி டிரைவர் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அனைவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்