குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
3/7/2021 5:37:13 AM
திருமயம்.மார்ச்6: திருமயத்தில் குழந்தை தொழிலாளர்கள்பணியமர்த்தப்பட்டுள்ளதா என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் 1098 சைல்டு லைன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களை ஒழித்து, பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கு அனுப்ப அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்டம்திருமயத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதா என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் 1098 சைல்டு லைன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
சைல்டு லைன் மாவட்ட துணை இயக்குநர் குழந்தைவேலு ஆலோசனையின் படி மாவட்ட குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர் சசிகலா, 1098 சைல்டு லைன் திருமயம் களப்பணியாளர் ராஜலட்சுமி ஆகியோர் திருமயத்தில் உள்ள ஜவுளிக்கடை, இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை, பழக்கடை, டீ கடை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் குழந்தை தொழிலாளர் இருக்கிறார்களா என ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு கடை உரிமையாளர்களிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
மேலும் செய்திகள்
அரிமளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்
திருமயம் அருகே புலிவலத்தில் 120 பேருக்கு கொரோனா தடுப்பூசி
திருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு
அறந்தாங்கி அருகே ஆற்றை தூர்வார கோரி மக்கள் சாலை மறியல்
தீ தொண்டு நாள் விழாவையொட்டி செவிலியர்களுக்கு செயல்விளக்கம்
லாரி மோதி விவசாயி பலி
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்