அறந்தாங்கி வட்டார வள மையத்தில் ஓவிய திருவிழா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
3/7/2021 5:36:59 AM
அறந்தாங்கி, மார்ச் 6: அறந்தாங்கியில் ஓவிய திருவிழா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட திட்ட உதவி அலுவலர் ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படி அறந்தாங்கி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் ஓவிய திருவிழா போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வீரப்பன் மற்றும் கருப்பையா முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி ஒன்றியத்தில் ஓவிய திருவிழா போட்டியில் கோங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி ரம்யா முதலிடமும், வல்லவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி பிரசீனா இரண்டாமிடமும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவி நிவாஷினி மூன்றாமிடமும் பிடித்தனர். மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர் நீலவேணி செய்திருந்தார். ஆசிரியர் பயிற்றுனர் ஈஸ்வரன் வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
அரிமளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்
திருமயம் அருகே புலிவலத்தில் 120 பேருக்கு கொரோனா தடுப்பூசி
திருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு
அறந்தாங்கி அருகே ஆற்றை தூர்வார கோரி மக்கள் சாலை மறியல்
தீ தொண்டு நாள் விழாவையொட்டி செவிலியர்களுக்கு செயல்விளக்கம்
லாரி மோதி விவசாயி பலி
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!