வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்கம்
3/7/2021 5:36:22 AM
பொன்னமராவதி, மார்ச் 6: பொன்னமராவதி அருகே காரையூரில் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றனர். மேலும் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடந்தது. விழிப்புணர்வு முகாமை பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி துவக்கி வைத்தார். அப்போதுவாக்காளர்கள் எவ்வாறு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது என்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் பொன்னமராவதி துணை தாசில்தார் பிரகாஷ், காரையூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி, கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரபாண்டியன் மற்றும் கிராம உதவியாளர்கள் மற்றும் வாக்காளர்கள் பங்கேற்றனர்.
அறந்தாங்கி: அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் மோகன் தலைமையில் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் விதம் குறித்த செயல் விளக்கம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அறந்தாங்கி சப் கலெக்டர் ஆனந்த் மோகன் தலைமை வகித்து செயல்விளக்கத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம், மோகன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அரிமளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்
திருமயம் அருகே புலிவலத்தில் 120 பேருக்கு கொரோனா தடுப்பூசி
திருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு
அறந்தாங்கி அருகே ஆற்றை தூர்வார கோரி மக்கள் சாலை மறியல்
தீ தொண்டு நாள் விழாவையொட்டி செவிலியர்களுக்கு செயல்விளக்கம்
லாரி மோதி விவசாயி பலி
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்