தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை
3/7/2021 4:46:09 AM
தேனி, மார்ச் 7: திருச்சியில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்திற்கு தேனியில் இருந்து திமுகவினர் திரளாக கலந்து கொள்வதென திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தேனி திமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணக்குமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அருணாசேகர் முன்னிலை வகித்தனர். தேனி நகர பொறுப்பாளர் சூர்யாபாலமுருகன் வரவேற்றார்.
கூட்டத்தின்போது, திருச்சியில் இன்று(7ம் தேதி) நடக்க உள்ள திமுக பொதுக்கூட்டத்தில் தேனி திமுக வடக்கு மாவட்டத்தில் இருந்து திமுகவினர் திரளாக கலந்து கொள்வது எனவும், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் ஆகிய தொகுதிகளில் திமுக யாரை வேட்பாளராக அறிவித்தாலும் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக கருதி வெற்றிக்காக அயராது பாடுபட்டு, திமுக வேட்பாளர்களை வெற்றியடையச் செய்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினை அரியணை ஏறச் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் தேனி வடக்கு சக்கரவர்த்தி, தேனி தெற்கு ரத்தினசபாபதி, பெரியகுளம் வக்கீல்.பாண்டியன், சின்னமனூர் மேற்கு முருகேசன், நகர பொறுப்பாளர்கள் பெரியகுளம் முரளி, போடி செல்வராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர். பேரூர், ஊராட்சி கிளைக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
திமுகவில் இணைந்த அதிமுகவினர்
சீலையம்பட்டியில் 18 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகன் சாவில் மர்மம் என புகார்: குடும்பத்தினர் சாலை மறியல்
வ.உ.சி வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட பேருந்து கண்காட்சி
இளம்பெண் தற்கொலை
ஏர்போர்ட்டில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.7.18 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு
ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை