SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவெற்றியூரில் ஆவணமில்லாத ₹1.59 லட்சம் பணம் பறிமுதல்

3/7/2021 4:38:57 AM

தொண்டி, மார்ச் 7: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் 24 மணிநேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணமில்லாத பணம், பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். திருவாடானை தொகுதியில் 3 பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திருவெற்றியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கடுக்கலாரையை சேர்ந்த வின்சென்ட் சேவியர் என்பவரின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் உரிய ஆவணமின்றி ரூ.79 ஆயிரம் பணம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் எம்ஆர் பட்டினம் பகுதியில் சோதனை செய்த போது கரம்பக்குடியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்