வீட்டில் தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண், வாலிபரை தாக்கி கொள்ளை முயற்சி கமுதி அருகே 4 பேருக்கு வலை
3/7/2021 4:38:49 AM
கமுதி, மார்ச் 7: கமுதி அருகே மேலராமநதி கிராமத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரது மனைவி குமராயி (45) இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் வந்து வீட்டின் கதவை தட்டி எங்களுடன் வந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்டதாக கூறி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். உடனே குமாரயி எழுந்து கதவை திறந்தார். அப்போது அக்கும்பலில் ஒருவர் குமராயின் கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார். இதை வீட்டில் இருந்த குமராயின் உறவினர் செல்வா (19) கூச்சலிட்டுள்ளார். உடனே அக்கும்பல் வாளால் செல்வாவை வெட்டினர். பின்னர் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதை கண்டதும் 4 பேரும் தப்பியோடி விட்டனர். காயமடைந்த குமராயி, செல்வா ஆகியோர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து குமராயி அளித்த புகாரின்பேரில் கமுதி போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர். வீட்டின் கதவை தட்டி குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
கொரோனா தடுப்புக்கு ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ளலாம்
கல்வெட்டு படிக்க பயிற்சி
குடிநீர் கிடைக்காமல் குளத்து தண்ணீரை குடிக்கும் கிராமமக்கள் தொற்று நோயால் அவதி
சாலையில் தேங்கிய மணலால் விபத்து
கராத்தேயில் மாணவர்கள் சாதனை
ஏர் பூட்டும் விழா கொண்டாட்டம்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!