SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி - ரமேஸ்வரம் நெடுஞ்சாலை சந்திப்பில் விபத்துகளை தடுக்க ரவுண்டானா தேவை ஆர்எஸ்.மங்கலம் மக்கள் கோரிக்கை

3/7/2021 4:38:44 AM

ஆர்எஸ்.மங்கலம், மார்ச் 7: ஆர்எஸ்.மங்கலம் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் விபத்துகளை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஆர்எஸ்.மங்கலமும் ஒன்றாகும். இப்பகுதியில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, தேவிபட்டினம் போன்ற புனித தலங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் செல்வதற்கும் இங்குள்ள திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையே முக்கிய வழித்தடமாக உள்ளது.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆர்எஸ்.மங்கலம் செல்வதற்கு பிரிந்து செல்லும் இடத்தில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. தற்போது இந்த தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
எனவே இந்த விரிவாக்க பணியின்போதே இங்கு ரவுண்டானா அமைத்தா ல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம். எனவே இதற்கு மாவ ட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர்எஸ்.மங்கலம் பிரிவு பகுதி தற்போது மிகவும் போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறி விட்டது. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் திரும்புவதால் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. உதாரணமாக திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பஸ், பஸ்ஸ்டாண்டிற்குள் சென்று விட்டு திரும்பி செல்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறு பஸ்நிலையத்திற்கு சென்று திரும்பும் பஸ் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் திரும்பும் போது வேறு வாகனங்களில் மோதி எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது. எனவே பொதுமக்கள், வாகனஓட்டிகள் நலன் கருதி விரிவாக்க பணி நடக்கும் போதே திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்