SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதுகுளத்தூர் அருகே கோயிலை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

3/7/2021 4:38:21 AM

சாயல்குடி, மார்ச் 7: முதுகுளத்தூர் அருகே கோயிலை உடைத்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். முதுகுளத்தூர் அருகே விளாத்திக்கூட்டம் பஸ்நிறுத்த பகுதியில் உள்ள ஆடுகளரி அய்யனார் கோயில். இங்கு பூசாரியாக சண்முகநாதன் என்பவர் உள்ளார். இவர் நேற்று காலை வழக்கமான பூஜைகள் செய்ய கோயிலுக்கு வந்தார். அப்போது கோயிலின் வெளிப்பகுதியில் இருந்த ஆஞ்சநேயர் சிலை சேதமடைந்து இருந்தது. தொடர்ந்து பார்க்கையில் கோயிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த உண்டியல் பணம், பித்தளை குத்து விளக்குகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி உடனே கிராமமக்களுக்கும், பேரையூர் போலீசுக்கும் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். கோயில் உண்டியலில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் இருந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்