SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1000 போலீஸ் குவிப்பு - 3 அடுக்கு பாதுகாப்பு நாகர்கோவிலில் இன்று அமித்ஷா தேர்தல் பிரசாரம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

3/7/2021 4:22:41 AM

நாகர்கோவில், மார்ச் 7: உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகர்கோவிலில் இன்று பிரசாரம் செய்கிறார். அவரது வருகையையொட்டி 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தேர்தல் குறித்து ஆலோசனை வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (7ம்தேதி) குமரி மாவட்டம் வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் வந்திறங்கும் அவர் அங்கிருந்து கார் மூலம் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்து மீண்டும் நாகர்கோவில் வரும் அவர், இந்து கல்லூரி அருகே கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கிருந்து பின்னர் வேப்பமூடு வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பின்னர் வேப்பமூடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து காரில் வடசேரி உடுப்பி ஓட்டல் செல்லும் அவர், அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து மதியம் ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் செல்கிறார்.

அமித்ஷா வருகையையொட்டி, நாகர்கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்ட போலீசார் மண்டைக்காடு கோயில் பாதுகாப்பு பணியில் இருப்பதால் நெல்லை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் ஓட்டல் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த ஓட்டலில் பணியாற்றும் பணியாளர்களுக்கும், அமித்ஷா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பா.ஜ. நிர்வாகிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அமித்ஷா கார் செல்லும் வழிப்பாதைகளில் நேற்று மாலை முதலே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் உள்ள கடைகள், கட்டிடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. வீடுகளில் தங்கி இருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்களில் பணியாற்றும் நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி அவர்களை பற்றிய விபரங்களை சேகரித்தனர். இன்று மதியம் வரை கடைகள் திறக்கப்பட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். குமரி மாவட்டம் கன்னியாகுமரி கோவளம் இடையே சரக்கு பெட்டகம் தொடர்பான அறிவிப்பை, தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக தலைமை பொறியாளர் வெளியிட்டுள்ளார். இதனால் கடலோர கிராமங்களில் மீண்டும் போராட்டங்களுக்கு ஆயத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. அமித்ஷா வருகையையொட்டி தற்போது கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

 • 22-04-2021

  22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்