SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கம்பம் 8வது வார்டில் ஜல்லி பரப்பியாச்சு; சாலைப் பணி எப்போ போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி

3/6/2021 4:10:46 AM

கம்பம், மார்ச் 6: கம்பம் 8வது வார்டில் ஜல்லி பரப்பிய நிலையில், சாலை பணியை கிடப்பில் போட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன; ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 8வது வார்டு செக்கடி தெருவில் கடந்த மாதம் திடீரென புதிய தார்ச்சாலை அமைக்க பணிகள் நடந்தன. இதையொட்டி சுமார் 15 நாட்களுக்கு முன் ஜல்லிகற்களை பரப்பினர். அதன்பின் சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதுவரை பணி தொடங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர்.

வயதானவர்கள் கால்களில் ஜல்லிக்கற்கள் இடறி கீழே விழுகின்றனர். எனவே, சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘புதிய தார்ச்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டி 15 நாட்களாகியும் இன்னும் பணியை தொடங்காமல் உள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு அவதிப்படுகிறோம். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விரைவில் சாலைப்பணியை முடிக்க முடிக்க வேண்டும்‘ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்