SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்எஸ்.மங்கலம் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் பறக்கும் படையினர் அதிரடி

3/6/2021 4:05:00 AM

ஆர்எஸ்.மங்கலம், மார்ச் 6:  ஆர்எஸ்.மங்கலம் அருகே ஆவணமின்றி கொண்டு சென்றதாக 3 பேரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆர்எஸ்.மங்கலம் ஜங்சன் பகுதியில் சேவுகப்பெருமாள் தலைமையில் எஸ்எஸ்ஐ ஜெகநாதன், தலைமை காவலர் பாலமுருகன், காவலர்கள் தர்மராஜ், வனிதா லெட்சுமி ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த திருவாடானையை சேர்ந்த தெட்சிணா மூர்த்தி என்பவர் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 810ம், புல்லூரை சேர்ந்த விஜய் என்பவர் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 100ம், தளிர் மருங்கூரை சேர்ந்த வில்லியமாஸ் என்பவர் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 070ம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரிந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் 3 பேரிடமும் இருந்து மொத்தம் ரூ.5 லட்சத்து 7 ஆயிரத்து 910 பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்