SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக 278 வாக்குச்சாவடிகள் அமைப்பு கலெக்டர் தகவல்

3/6/2021 4:04:27 AM

ஆர்எஸ். மங்கலம், மார்ச் 6:  கொரோனா அச்சம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக 278 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலையொட்டி திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி- அரசு மேல்நிலைப்பள்ளி, தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னகீரமங்கலம் ஆர்சி தொடக்கப்பள்ளி, ஆர்எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த இடங்களை நேற்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 1,369 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா அச்சம் காரணமாக 1,050 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் கூடுதலாக 278 வாக்குசாவடிகள் என மொத்தம் 1,647 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் வாக்காளர்களுக்கு குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன’ என்றார். முன்னதாக கலெக்டர் உப்பூரில் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்து ஏற்படுத்திய விழிப்புணர்வு முகாமை ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், தாசில்தார்கள் ரவிச்சந்திரன், முருகவேல், செந்தில்வேல் முருகன், செந்தில் குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்