சாலையின் நடுவில் அமைக்கப்படும் தடுப்புச்சுவரில் இடைவெளி வேண்டும்: மேலூர் வியாபாரிகள் வலியுறுத்தல்
3/6/2021 4:01:00 AM
மேலூர், மார்ச் 6: மேலூர் நகரில் நெரிசலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை நெஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். உரிய இடைவெளி விட்டு தடுப்புச்சுவர் அமைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலூர் நகரில் செக்கடி பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை போக்குவரத்து நெரிசலாக இருக்கும். குறிப்பாக காலை மற்றும் மாலை வேளையில் நெரிசல் மிகமிக அதிகமாக இருக்கும். எனவே புதிதாக போக்குவரத்து போலீசாக பொறுப்பேற்கும் அதிகாரிகள் இவ்விடத்தில் பேரிகார்ட் வைப்பது வழக்கம்.
இதனால் சற்று போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும். அதை தொடர்ந்து அடுத்து பொறுப்பேற்பவர்கள் அதை அகற்றிவிடுவார்கள். இதனால் மீண்டும் நெரிசல் ஏற்பட்டு விடும்.தற்போது இவ்விடத்தில் நிரந்தரமாக சிமென்டால் ஆன தடுப்புச்சுவர் அமைக்க நெடுஞ்சாலை துறை முடிவெடுத்து பணிகளை துவக்கி உள்ளது. இதில் பேங்க் ரோட்டில் திரும்புவதற்கு வசதியாக சாலையில் இடைவெளிவிடாமல் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய இடைவெளிவிட்டு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் இருந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மதுரை மருத்துவக்கல்லூரி மாணவருக்கு கொரோனா
கொரோனா அலை பரவும் நிலையில் உரிய ஆணை பிறப்பிக்காமல் பள்ளிக்கு வரச்சொல்லலமா? ஆசிரியர் கூட்டணி கண்டனம்
நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மெல்லிசை கலைஞர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூரில் அதிகாரிகள் அலட்சியம் ஒரே மாதத்தில் குண்டும், குழியுமாக மாறிய சாலை
பாலமேடு பேரூராட்சியில் பஸ்சில் மாஸ்க் அணியாத பயணிகளிடம் அபராதம்
கொரோனா எதிரொலி பூக்கள் விலை வீழ்ச்சி
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்