SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் முடிவு வெளியாவதால் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதியை மாற்ற வேண்டும் தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

3/6/2021 3:59:59 AM

மதுரை, மார்ச் 6: பிளஸ் 2 பொதுத்தேர்வில் மே 3 மற்றும் 4ம் தேதி நடைபெறும் தேர்வுகளை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தலைமை ஆசிரியர் கழகத்தின் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. மாநிலச் சட்ட செயலாளர் அனந்தராமன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கந்தசாமி, மாநில துணைத்தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் கார்மேகம், பொருளாளர் ரமேஷ், துணைத்தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அமைப்பு செயலாளர் குமரேசன், கள்ளர் பள்ளி தலைவர் சின்னபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழக அரசு பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை வரும் மே 3ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பின் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. இது ஒரு சில இடத்தில் 3ம் தேதி வரை நடைபெறவும் வாய்ப்பு உண்டு. இதனால் 3ம் தேதி முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவும். மாணவர்களும், ஆசிரியர்களும் சீரான மனநிலையில் தேர்வை சந்திக்க முடியாது. எனவே அன்றைய தினம் போக்குவரத்து இடர்பாடுகளையும் மாணவர்கள் சந்திக்க நேரிடும். ஆகவே தேர்வுக்கான கால அட்டவணையை மாற்ற வேண்டும். அல்லது மே 3 மற்றும் 4ம் தேதி நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வை கடைசியாக நடத்த வேண்டும் தீர்மானம் நிறைவேற்றி பள்ளி கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்