SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய தொகுதியில் தமாகா போட்டியா?

3/6/2021 3:59:34 AM

மதுரை, மார்ச் 6: அதிமுகவில் யாரும் சீட் கேட்க ஆள் இல்லாததால் மதுரை மத்திய தொகுதி கூட்டணி கட்சியான தமாகாவுக்கு கிடைக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது அரசியல் கட்சியினர் இடையே தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் தமாகா உள்ளது. இக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுகவிடம் கோரியுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சரியான ஆட்கள் இல்லை. கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஜெயபால் தற்போது அமமுக மாவட்ட செயலாளராக உள்ளார். இத்தொகுதியில் யாரை நிறுத்துவது என அதிமுக தீவிர ஆலோசனை நடத்தியும், மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள கட்சிக்காரர்கள் யாரும் இல்லை.

எனவே இத்தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது. தமாகா இத்தொகுதியை கேட்டதால், அதிமுகவும் இசைவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மத்திய தொகுதியில் தமாகா போட்டியிடுவது உறுதியாக உள்ளது. தமாகா சார்பில் முன்னாள் எம்.பி ராம்பாபு, முன்னாள் கவுன்சிலர் சிலுவை ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதில் யாருக்கு சீட் என்பதை விரைவில் ஜி.கே.வாசன் அறிவிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்