தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
3/6/2021 3:53:59 AM
கோவை, மார்ச் 6: கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் 4 ஆயிரத்து 467 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பணியில் மட்டும் 21 ஆயிரத்து 500 அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் இருந்து வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை சுகாதாரத்துறையின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகள்
கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 727 பேருக்கு கொரோனா
கோவையில் 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மட்டுமே இருப்பில் உள்ளது
சம்பளம் கேட்டதால் ஆத்திரம் டிரைவரை தாக்கிய டிராவல்ஸ் ஓனர் மீது வழக்கு
தமிழகத்தில் சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்குவதே என் நோக்கம்
கோவை மாவட்டத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்க நோயாளிகள் அலைக்கழிப்பு
கோவை-திருச்சி ரோடு மேம்பாபணி 80 சதவீதம் நிறைவு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்