காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி
3/6/2021 3:19:16 AM
அண்ணாநகர், மார்ச் 6: திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (30). வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர், மின்சார ரயிலில் சென்று வரும்போது, அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் காதலாக மாறியது. அவ்வப்போது இருவரும் செல்போனில் பேசியும், அடிக்கடி தனிமையில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வில்லிவாக்கத்தில் அதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு பெற்றோரும் தடபுடலாக செய்து வந்தனர்.
திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த காதலி உடனே, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், அந்த இளம்பெண்ணுடன் நேற்று காலை திருமண மண்டபத்துக்கு சென்றனர். அங்கிருந்த கணேசனின் உறவினர்களிடம், அவரது காதல் விவகாரத்தை இளம்பெண் தெரிவித்தார். மேலும் கணேசனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் அந்த இளம்பெண் காட்டினார்.
இதையடுத்து திருமணத்தை நிறுத்திய போலீசார், இரு வீட்டாரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது கணேசன், காதலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். காதலி அரக்கோணத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார், அரகோணம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்து காதல் சின்னத்திரை நடிகையிடம் தகராறு உதவி இயக்குனருக்கு அடி உதை: போலீஸ் விசாரணை
வீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தபோது தாய், பெண் சிசு பரிதாப பலி
மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தம்
மதுசூதனன் மனைவி கொரோனாவுக்கு பலி
கள்ளக்காதலியின் ஆசைகளை நிறைவேற்ற கொள்ளையனாக மாறிய பிரபல டாட்டூ கலைஞர்: கூட்டாளிகள் 2 பேரும் பிடிபட்டனர்; 15 சவரன், செல்ேபான்கள் பறிமுதல்
இரும்பு ராடால் அடித்து வீட்டு உரிமையாளர் படுகொலை: கொடுங்கையூரில் பயங்கரம்
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்