பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன்நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலை
3/5/2021 3:01:46 AM
பொன்னமராவதி, மார்ச் 5: பொன்னமராவதி அருகே பூட்டிய வீட்டில் 8 பவுன் நகை மற்றும் ரூ.20ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வார்பட்டு கொல்லுப்பட்டி வங்களக்காடு பெரியசாமி மகன் பச்சை (43), கூலித்தொழிலாளி. இவரும், இவரது மனைவியும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். மகள் பச்சையம்மாள் பள்ளிக்கு சென்றுவிட்டார். சம்பவத்தன்று மாலை பச்சையம்மாள் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதன் பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு இரும்பு பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. உடனடியாக தனது தந்தைக்கும், தாய்க்கும் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை, வெள்ளிக்கொலுசு ஒரு ஜோடி, ரொக்கப்பணம் ரூ.20ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பொன்னமராவதி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வீட்டின் உடைத்து கொள்ளைடித்துச்சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை
பட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி
புதுகை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உலக புவிநாள் தினம் மரக்கன்று நடும் பணி
படுக்கை வசதிகளை கலெக்டர் ஆய்வு புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு துவக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலாப்பழம் விளைச்சல் குறைந்தது
கோவிட் கட்டுப்பாட்டு நேரங்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதி தடையின்றி கிடைக்க நடவடிக்கை
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!