SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.63 லட்சம் வசூல்

3/5/2021 3:01:28 AM

பொன்னமராவதி, மார்ச் 5: பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.4.63 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது. பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா வரும் 14ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் துவங்குகிறது. இதனால் திருவிழாவுக்கு முன் கோயில் காணிக்கை உண்டியல் எண்ணுவது வழக்கம். இதன்படி நேற்று கோயில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது.
புதுக்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ், கோயில் செயல் அலுவலர் வைரவன், ஆய்வாளர் ராமகிருஸ்ணன் முன்னிலை வகித்தனர். கோயில் பணியாளர்கள், மாணவர்கள், வங்கி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று உண்டியலில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 4,63,743 ரொக்கம் மற்றும் தங்கம் 32 கிராம், வெள்ளி 87 கிராம் இருந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2021

    23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்