SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

3/5/2021 3:01:22 AM

அறந்தாங்கி, மார்ச் 5: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அறந்தாங்கி எரிச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அறந்தாங்கி தாலுகா முழுவதும் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் போடுகிற நெல் மூட்டைகளுக்கு உடனடியாக பண பட்டுவாடா வழங்குவதுடன் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 60 வீதம் கமிஷன் பெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். திறக்காத நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். அறந்தாங்கி தாலுகா எரிச்சி சிதம்பரவிடுதியில் செயல்பட்டு வரும் நெல் குடோன் அமைந்துள்ள இடம், கூட்டுறவு துறைக்கு சொந்தமானதாக உள்ளதால் நெல் கொள்முதல் கட்டிடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட இடத்தை கூட்டுறவு துறையிடம் இருந்து தமிழ்நாடு நுகர்வோர் வணிக கழகத்துக்கு மாற்றித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, தண்டாயுதபாணி, ராதாகிருஷ்ணன், கோவிந்தசாமி, ரங்கசாமி, செந்தில்வேலன், பெரியகருப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2021

    23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்