SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டிபட்டி அருகே மாயமான மின்வாரிய ஊழியரை கண்டுபிடித்து தர உத்தரவு

3/5/2021 2:50:33 AM

ஆண்டிபட்டி, மார்ச் 5: ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் சுந்தரபிரகாஷ் (40). மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். திருமணமான இவர் குடும்ப பிரச்னையால் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 201 ம் ஆண்டு டிச.10ம் தேதி வேலைக்கு சென்ற சுந்தரபிரகாஷ் அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுந்தரபிரகாஷின் தாயார் பரஞ்ஜோதி க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாயமான சுந்தரமூர்த்தியை கண்டுபிடிக்க கோரி பரஞ்ஜோதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி, சுந்தரமூர்த்தியை விரைந்து கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த க.விலக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2021

    23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்