டாஸ்மாக்கில் தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை
3/5/2021 2:50:26 AM
தேனி, மார்ச். 5: தேனியில் டாஸ்மாக் மேற்பார்வையாளர், தனியார் மதுபார் உரிமம் எடுத்துள்ளோருக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பாஸ்கரன் தலைமை வகிக்க, மாவட்ட கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் சாரங்கன் முன்னிலை வகித்தார். உதவி கலால் ஆணையர் விஜயா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் டாஸ்மாக் மதுபானக்கடையில் மதுவாங்க டோக்கன்கள் மூலமாகவோ, அடையாள அட்டைகள் மூலமாகவோ மதுபாட்டில்களை விற்க கூடாது, அரசியல் கூட்டங்களில் பணியாளர்கள் பங்கேற்க கூடாது, கடையில் எப்போதையும் விட 30 சதவீதம் விற்பனை அதிகரித்தால் தணிக்கை செய்ய வேண்டியதிருக்கும்.
தவறு நடந்தது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கடையின் விற்பனை தொகையை வங்கியில் செலுத்த செல்லும்போது ஆதாரங்களையும் எடுத்து கொண்டு பணியாளர் அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். இதில் டாஸ்மாக் மதுபானக்கடை மேற்பார்வையாளர்கள், தனியார் மதுபார் உரிமம் எடுத்தவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கம்பம் மூதாட்டி மர்மச்சாவில் திருப்பம் குடிபோதையில் பலாத்காரம் செய்து கொன்ற கொடூர வாலிபர் கைது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
செவிலியர் தூக்கிட்டு தற்கொலை
வருசநாடு அருகே சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
டிஎஸ்பி தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்